Wednesday, September 28, 2011

நுறையீரலின் குரல்!

பிறக்கையில் வெள்ளையாம் நான்
அம்மா சொல்லி ஞாபகம்
பல வருடம் கடந்து
ஊர் திரும்பினேன்

"என்னடா கண்ணா
ரொம்ப கருத்துட்ட
சென்னையில வெயில்
அதிகம் போல"

..என அனைவரின்
விசாரணை
ஊரில்!

வீட்டிற்குள் நுழைந்ததும்
கண்ணாடி பார்த்தேன்
முதன் முறையாய் காண்பது போல்!

ஏளனமாய் ஓர் குரல்...

"கருத்துவிட்டாயோ!
என கவலையா??

நீ புகை பிடித்து

கரியை எனக்கு பூசி

கரித்துண்டுகளை எனக்கு
உணவாய் அளித்து

கருப்பன்னனாய்
என்னை மாற்றி

உன் நிறம் கருத்ததுவோ??
என இன்று ஆராய்ச்சி!

கொண்டாட்டமோ, துக்கமோ
என்னை வருத்துகிறாய்!
பின்னர் நீயும் உன்னைச் சார்ந்தோரும்
வருந்துவீர் என மறந்து!!"

 

No comments:

Post a Comment