துணையின்றி உன் சிறு உடல் திருப்பி
குப்புற கவிழ்ந்தாய், குழந்தையாய்
உற்சாகம் சூழ, உன்
முதல் சாதனை!
முட்டியிட்டு தவழ்ந்து
கை ஊன்றி தனித்து நின்றிட
மகிழ்ச்சி பொங்கும், உன்
இரண்டாம் சாதனை!
ஓட ஆரம்பித்ததும், வார்த்தைகளை
உச்சரிக்க தொடங்கியதும்
பிறரை சார்ந்த வாழ்க்கை
தொடங்கியதோ?
தனிச்சையான சாதனை
மறைந்ததோ?
மறந்ததோ??
நீ ஓட, வாழ்க்கையும் ஓட
வாழ்க்கையோட நீ ஓடுகின்றாய்
பிறருக்காக, பிறரை சார்ந்த உன்
சாதனைக்காக!
சற்றே நில்!
உன்னுள் கவனி!
உன் திறமை கொண்டு செல்!
ஓவ்வொரு அடியும், உன் சாதனைப்படியே!!
பிறர் துனையின்றி...
குழந்தையாய் சாதித்தாய்!
குமரனாய் சாதிப்பாய்,
வாலிபனாய் சாதிப்பாய்,
முதுமையிலும் சாதிப்பாய்!
வாழ்க்கை உன் கையில்!!
குப்புற கவிழ்ந்தாய், குழந்தையாய்
உற்சாகம் சூழ, உன்
முதல் சாதனை!
முட்டியிட்டு தவழ்ந்து
கை ஊன்றி தனித்து நின்றிட
மகிழ்ச்சி பொங்கும், உன்
இரண்டாம் சாதனை!
ஓட ஆரம்பித்ததும், வார்த்தைகளை
உச்சரிக்க தொடங்கியதும்
பிறரை சார்ந்த வாழ்க்கை
தொடங்கியதோ?
தனிச்சையான சாதனை
மறைந்ததோ?
மறந்ததோ??
நீ ஓட, வாழ்க்கையும் ஓட
வாழ்க்கையோட நீ ஓடுகின்றாய்
பிறருக்காக, பிறரை சார்ந்த உன்
சாதனைக்காக!
சற்றே நில்!
உன்னுள் கவனி!
உன் திறமை கொண்டு செல்!
ஓவ்வொரு அடியும், உன் சாதனைப்படியே!!
பிறர் துனையின்றி...
குழந்தையாய் சாதித்தாய்!
குமரனாய் சாதிப்பாய்,
வாலிபனாய் சாதிப்பாய்,
முதுமையிலும் சாதிப்பாய்!
வாழ்க்கை உன் கையில்!!
ஆழ்ந்த பொருள், இனிய கவிதை. என் காலை நல்ல சிந்தனையுடன் தொடங்கிற்று. நன்றி காயத்ரி.
ReplyDeleteஇந்த கவிதை, குழந்தைகளுக்கு அல்ல!! அவர்களை வளர்க்கும் பெரியவர்களுக்கு!!! பெரியவர்களின் அன்பும், அக்கறையும் சில நேரங்களில் குழந்தைகளின் தன்னாற்றலுக்கு முட்டுக்கட்டையாகிவிடுகிறது!!!!
Thanks saravanan!
ReplyDelete