Wednesday, March 23, 2011

Wait

Waited for 10 months
In the womb
To be special
And see wonders of life

Waited for a year
To walk and run
T o attract attention
And enjoy the wonders of life

Waited for 5 years
To join a group
To learn alphabets
And taste the wonders of life

Waited for 15 years
To grow and learn
The facts of life
And enjoy the teens of life

Waited for 25 years
To hold the hand
Of my beloved
To cross the rest of life

Waited
all the years through
And
Continue to wait
In coming moments too

As wait thrills
And brings
Everlasting Joy
In the swings of our life!!




கவிதை

கவிதை யாதென
குழம்பிப் போனேன்

கவிதை எழுதிட
துடிப்பு கொண்டேன்

துடுப்பாய்
பேனா

கப்பளாய்
காகிதம்

கடலாய்
சிந்தனை

வார்த்தை
கோர்த்தேன்

எழுத
தொடங்கினேன்

எழுதியது
என் துடுப்பு
துடிப்பில்லாமல்

வியந்தேன்!!

உறைத்தேன்
என் வருத்தத்தை
தோழியிடம்

உணர்ந்தேன்

மொழி இல்லாத
உணர்வுக்கு
உயிரளித்து
ஓசையெழுப்பச்
செய்வதே
கவிதையென்று!!

சுனாமி


பூவுக்குள் பூகம்பம்
வண்டுகளின் வண்முறையால்
தேனுக்குள் கடல் சீற்றம்
தேன் உறியும் பூச்சிகளாள்

தோட்டத்தின் குமுறல்கள்
வாண் பிளந்தும்
தோட்டக்காரன் செவுடன்

வண்டுகளும் பூச்சிகளும்
வட்டமிட்டு கூத்தாட
தோட்டகாரன் குருடன்

உப்பான கன்னீர் துளி
சொட்டு சொட்டாய் பெருகிட
சுனாமியின் அறிகுரி
வெகு தெளிவாய் தெறியுதடி!!

Tuesday, March 8, 2011

Happy Women's Day 2011

சிட்டுக் குருவியென சிங்காரமாய்
ரீங்காரம் போட்டு
தோகை விரித்தாடும் மயிலெனவாய்
வலம் வந்து
சிந்தனை சிற்பிகளாய்,
ஓவியக் காவியமாய்,
சரித்திரத்தில் நிலைத்திருக்கும்
பெண்மணிச் செல்வங்களே!!
 
பிறக்கையிலே பெண் என்று
முகம் சுளித்த உறவினரோ, நாம்
நடக்கையிலே பெண் என்று
சுமை கொடுத்த சான்றோரோ
தடுமாறும் தருணத்தில்
தோள் கொடுத்து உயர்த்திடுவோம்
 
கண்ணுக்கு மை பூசி
கண்ணீரை மறைக்கின்றோம்
மருதாணி கையில் கொண்டு
கை வெடிப்பை பூசுகின்றோம்
 
மகளாய், மனைவியாய்
தாயாய், தலைவியாய்
பல ரூபம் கொண்டும்
பெண்ணாய் பெண்மைக்கு
கிரீடம் சூடும் பொறுமையால்
உருகொண்டு,
சாதிக்க பிறந்துள்ளோம்!!
 
சிறகடித்து பறக்கின்ற சிட்டுக்களாய்
விண்ணுக்கும் பாதை வகுப்போம்
அழகினை பறைசாற்றும் ஓவியமாய்
அழகுக்கோர் வடிவமைப்போம்
 
புன்-னகை உடுத்தி
கண்ணில் மென்-மை பொருத்தி
செயலில் தன்மை கொண்டு
பெண்மையை பறைசாற்றி
பல சாதனையை புரிந்திடுவோம்
பெண்டீரே வாரீர்!!!
 
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!!

Thursday, March 3, 2011

கணிணி - காதலி

உன் முதல் பார்வையிலே
என்னை தொலைத்தேன்
உன்னை தழுவிட
நெஞ்சம் துடித்தேன்
கை விரல் விளையாட்டில்
என்னை மறந்தேன்
நான் எண்ணியதெல்லாம்
நீ எனக்களித்திட
உள்ளம் நெகிழ்ந்தேன்

நொடிகள் கடந்தன,
நாட்கள் கடந்தன
வருடம் கடந்தன
நானும் நீயும்
நம்முள் பிரியா உறவும்..

உன்னை பற்றியதில்
என்னை பற்றியது
செல்வம், ஆடை, ஆபரணம்
நிலம், மனை,
மற்றும் பற்பல பொருள்கள்

உன் மோகத்தில்,
மறந்தேன்..

என் கை விரல் பற்றி
நடை பழக்கிய என் தந்தையை!

தன் உடல் சுமை கூட தாளாத வயதில்
என் புத்தகச் சுமையை தான் சுமந்து
என்னை பள்ளிக்கு அழைத்து சென்ற தாத்தாவை!

ஓய்வில்லா கண்கள் ஓய்வுக்கு ஏங்கும் பொழுதும்
எனக்காய் ஒரு குட்டி கதை கூறி
அதில் ஓர் வழிகாட்டி, என்னை உறங்க வைத்த பின்
தான் உறங்கிய பாட்டியை!

பள்ளி பருவம் முதல்,
கல்லூரி பருவம் வரை
என்னுடன், என் கனவுடன், என் மகிழ்வுடன், என் சோர்வுடன்
கலந்து, பகிர்ந்து, என்னை தன் தோள் சாய்த்து, எனை உயர்த்திய
என் உயிர்த்தோழர்களை!

வெயிலிலும் மழை காட்டி
சுட்டெரிக்கும் நெருப்பிலும் குளிரூட்டி
என்னையே உரு மாற்றி,
என் உயர்வுக்கு வழி காட்டி
காதலில் கரைந்து
எனக்காய் புது உலகம் புதுப்பித்த
என் அங்கமாய் என்னுள் வசிக்கின்ற என் மனைவியை!

கண் விழித்த நாள் முதல்
எனக்களித்து, தான் உண்டு
என்னுடன் விளையாடி
என்னுடன் தான் பயின்று
இரவு பகல் பாராது
எனக்காய், எனக்கு மட்டுமாய்
உழைத்து, களைத்து, கரைந்து
இன்னும் எனக்காய் காத்திருந்து
மாறாத புன்னகையோடு
நள்ளிரவில் "சாப்பிட்டாயா கண்ணா?"
என நலம் விசாரிக்கும்
எனக்குயிர் அளித்த
என் அன்னையை!

இவை அனைத்தையும்
மறக்க செய்தாயே..

காதலியே - கணிணியே!!

உன் காதலால்
உயிரில்லா செல்வத்தை பெற்றெடுத்தேன்
பல உயிருள்ள நேசத்தின் மரணத்தில்!!!