Tuesday, March 8, 2011

Happy Women's Day 2011

சிட்டுக் குருவியென சிங்காரமாய்
ரீங்காரம் போட்டு
தோகை விரித்தாடும் மயிலெனவாய்
வலம் வந்து
சிந்தனை சிற்பிகளாய்,
ஓவியக் காவியமாய்,
சரித்திரத்தில் நிலைத்திருக்கும்
பெண்மணிச் செல்வங்களே!!
 
பிறக்கையிலே பெண் என்று
முகம் சுளித்த உறவினரோ, நாம்
நடக்கையிலே பெண் என்று
சுமை கொடுத்த சான்றோரோ
தடுமாறும் தருணத்தில்
தோள் கொடுத்து உயர்த்திடுவோம்
 
கண்ணுக்கு மை பூசி
கண்ணீரை மறைக்கின்றோம்
மருதாணி கையில் கொண்டு
கை வெடிப்பை பூசுகின்றோம்
 
மகளாய், மனைவியாய்
தாயாய், தலைவியாய்
பல ரூபம் கொண்டும்
பெண்ணாய் பெண்மைக்கு
கிரீடம் சூடும் பொறுமையால்
உருகொண்டு,
சாதிக்க பிறந்துள்ளோம்!!
 
சிறகடித்து பறக்கின்ற சிட்டுக்களாய்
விண்ணுக்கும் பாதை வகுப்போம்
அழகினை பறைசாற்றும் ஓவியமாய்
அழகுக்கோர் வடிவமைப்போம்
 
புன்-னகை உடுத்தி
கண்ணில் மென்-மை பொருத்தி
செயலில் தன்மை கொண்டு
பெண்மையை பறைசாற்றி
பல சாதனையை புரிந்திடுவோம்
பெண்டீரே வாரீர்!!!
 
இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment