Wednesday, September 28, 2011

நுறையீரலின் குரல்!

பிறக்கையில் வெள்ளையாம் நான்
அம்மா சொல்லி ஞாபகம்
பல வருடம் கடந்து
ஊர் திரும்பினேன்

"என்னடா கண்ணா
ரொம்ப கருத்துட்ட
சென்னையில வெயில்
அதிகம் போல"

..என அனைவரின்
விசாரணை
ஊரில்!

வீட்டிற்குள் நுழைந்ததும்
கண்ணாடி பார்த்தேன்
முதன் முறையாய் காண்பது போல்!

ஏளனமாய் ஓர் குரல்...

"கருத்துவிட்டாயோ!
என கவலையா??

நீ புகை பிடித்து

கரியை எனக்கு பூசி

கரித்துண்டுகளை எனக்கு
உணவாய் அளித்து

கருப்பன்னனாய்
என்னை மாற்றி

உன் நிறம் கருத்ததுவோ??
என இன்று ஆராய்ச்சி!

கொண்டாட்டமோ, துக்கமோ
என்னை வருத்துகிறாய்!
பின்னர் நீயும் உன்னைச் சார்ந்தோரும்
வருந்துவீர் என மறந்து!!"

 

Tuesday, September 27, 2011

ஓடி விளையாடு பாப்பா!

விளையாட்டிற்கு வயதில்லை
வயதாகியதால் விளையாடுவதில்லை
என முதியோர் வாக்கு
உண்மையா??

விளையாடிப்பார்!
வயதாவதே அறியாதிருப்பாய்
மனதளவிலும்
உடல் அளவிலும்!

விளையாடுகையில்
வியர்வை வெளியேறும்
முதுமையோடும், சில பல
வியாதிகளோடும்!

இளமையும், உடல்
நலனும் விளையாட்டுடன்
ஒப்பந்தம் செய்தனவோ??

விளையாட விளையாட
குதூகலமாய், நம்முள்
குடிகொண்டிருக்கின்றன!!

விளையாடுவோம்!
இளமையோடும்
உடல் நலத்தோடும்
பல்லாண்டு வாழ்ந்திவோம்!!

Tuesday, September 20, 2011

நேற்று இன்று நாளை!!

நேற்று இன்று நாளை
காலத்தின் பிரிவினை
ஒன்றிலும் ஒருவராலும்
உறுதியாக வாழ இயலாத ஓர் நிலை!

நேற்றுக்குள் நுழைவாயில் இல்லை
நாளைக்குள் செல்லும் வாகனம் இல்லை!

இன்றைக்குள் இருக்கின்றோம்...

நேற்றின் நுழைவாயிலை ஆராய்ந்து
நாளைக்குள் செல்லும் வாகனத்தை உருவாக்கிக்கொண்டு

இன்றைய இலவச வீட்டை விட்டு
வெளியே!!

Friday, September 16, 2011

Road to Wonderland!

A long road
With bushes around
Thorns on the ground
Wonderland at its end

If opted to fly
I was lost in a maze
As bushes covered
The wonderland

To reach there
Is to walk on thorns
But no sandals
To guard!

Blood stains on thorns
Torn dresses on bushes
None around to guide
None to walk along

Ought to opt
To revert back
At a glance of thorns
OR Move Ahead!!

Cheerful voices, Sing merrily
In the wonderland
Sighing their source
Where I stand

Ought to opt
To move ahead
Safe With plans
Or Revert Back!!

Took my first step
Before thoughts invade
Second followed
Midway I crossed

Walking on the rim of the road
Balancing not to scratch on bushes
Or to step on thorns
Here I am in the midway!

A glance of success
Ran before
Opening the doors of dream
Drowning me within

Took a leap
With spots of blood
As I was pushed by the bushes
Stamping on thorns
Dreams on the journey
Harms us unlike vision
That guides us and
Balances our walks!

Struggles gave me pain with gain
Vision kept me intact
Wonderland kept me going
Songs drove me steadily

Here I am
Singing along
Merrily in Wonderland
Soothed the Pain of travel!!

Thursday, September 15, 2011

சாதனை!

துணையின்றி உன் சிறு உடல் திருப்பி
குப்புற கவிழ்ந்தாய், குழந்தையாய்
உற்சாகம் சூழ, உன்
முதல் சாதனை!

முட்டியிட்டு தவழ்ந்து
கை ஊன்றி தனித்து நின்றிட
மகிழ்ச்சி பொங்கும், உன்
இரண்டாம் சாதனை!

ஓட ஆரம்பித்ததும், வார்த்தைகளை
உச்சரிக்க தொடங்கியதும்
பிறரை சார்ந்த வாழ்க்கை
தொடங்கியதோ?

தனிச்சையான சாதனை
மறைந்ததோ?
மறந்ததோ??

நீ ஓட, வாழ்க்கையும் ஓட
வாழ்க்கையோட நீ ஓடுகின்றாய்
பிறருக்காக, பிறரை சார்ந்த உன்
சாதனைக்காக!

சற்றே நில்!
உன்னுள் கவனி!
உன் திறமை கொண்டு செல்!
ஓவ்வொரு அடியும், உன் சாதனைப்படியே!!

பிறர் துனையின்றி...
குழந்தையாய் சாதித்தாய்!

குமரனாய் சாதிப்பாய்,
வாலிபனாய் சாதிப்பாய்,
முதுமையிலும் சாதிப்பாய்!
வாழ்க்கை உன் கையில்!!


 

Wednesday, September 14, 2011

மாற்றம் - சிந்திப்போம்!!

காகித பூவும் அலங்கரிக்கும்
காய்ந்த மலரோ குப்பையில்!

மெழுகு பொம்மையும் வரவேற்கும்
கைம்பெண்ணோ மூலையில்!

காலப்போக்கில்...

குப்பையும் பயனாக
மறுமணங்கள் வரவேற்கப்பட
முன்னேற்றம்!

ஆனால்....

நேற்றைய இளமை, இன்றைய முதுமை
மாறாமல் அதிகரிக்கின்றன
முதியோர் இல்லம்!!

Tuesday, September 13, 2011

கனவு!

அடர்ந்த காட்டுக்குள்
ஆழ்ந்த இருளுக்குள்
தேடல்
ஒளிக்காக!

நிழலாய் உருவங்கள்
நிஜம் என திரையில்!

சிரிக்கின்றோம், அழுகின்றோம்
மிரளுகின்றோம், மிரட்டுகின்றோம்!

காதலில் வீழ்கின்றோம்
வீழ்ந்த காதலால் வருந்துகின்றோம்!

புதிய வரவை, புதிய உறவை
வரவேற்கின்றோம்!

உயிரின் பிரிவை, உறவின் முடிவை
பிரிந்த பின் உறவுகளின் உணர்வை உணருகின்றோம்!

வாழ்க்கையை வாழ்ந்து, வீழ்ந்து
விழிக்கின்றோம்!

திரையில் கண்டதை நினைத்து, மறந்து
தொடருகின்றோம் நிஜத்தில்!

தினம் ஓர் படம் இலவசமாய், முடிகிறது
விடியலில்!!

 

Monday, September 12, 2011

நீர் - தேகம்

நீர் குடத்தில் தத்தளித்து
மழை நீரால் உயிர் வாழ்ந்து
அன்பு எனும் பன்னீரில் குளித்து
வெறுமை எனும் வெந்நீரில் வெந்து
கண்ணீரில் கரைந்து
கடல் நீரில் கரை சேரும்
நம் தேகம்!!

தாய்!!

அழுகின்ற பிள்ளை
கிளுகிளுப்பு தந்தை கையில்
பால் புட்டி பாட்டி கையில்
கை தட்டல், தாத்தா எழுப்பும் ஓசை

கண்ணீரும் வற்றவில்லை!
அழும் ஓசை ஓயவில்லை!!

அவள் நுழைந்தாள்
அவன் பார்வை அவள் பக்கம்
அவள் களைப்பும் ஓய்ந்தது
அவன் அழுகையோடு!!

Thursday, September 8, 2011

பேராசை!

வானை பார்த்த மரம்
பறக்கும் ஆசையுடன்
கழுத்தை நீட்ட
வெட்டினான் விறகுக்காக

விறகிலிருந்து ஒலிந்து மறைந்து
வெளியேற, உள்ளேறியது
காகித ஆலை செல்லும்
லாரியில்

காகித உற்பத்தி ஆலையில்
நொறுங்கி, உருக்குலைந்து
பொடியாகி, கலவையுடன் கலந்து
காகிதமானது

காகிதம் காத்தாடியாக
பறக்கும் நிறைவுடன்
வானில் ஆனந்தமாய்
மரத்தை ஏளனம் செய்ய...

மரங்களின் கோபத்துக்குள்ளாகி
பலத்த காற்றில்,
மரக்கிளையில் சிக்கி
உருக்குளைந்து மடிய...

காத்தாடியை உயர்த்திய பிள்ளை
மற்றொரு காத்தாடியுடன்
ஆனந்தமாய்!!

அருகே...

ஓர் மரம் நீரின்றி மடியும் வேளை
சிறு பிள்ளை அன்போடு
நீரூற்றி உயிரளித்தான்!!

Wednesday, September 7, 2011

பயணம்!!

நிலையற்ற வாழ்க்கையை
நிலையாக்கும் கற்பனையில்
காலத்தை கடக்கும் வேகத்தில்
சறுக்குகின்றோம்!

நடக்கவில்லை, ஓடவில்லை
சறுக்குகின்றோம்!

அவ்வப்பொழுது நம்பிக்கை எனும்
உந்துதல் கொண்டு
அதிகரிக்கின்றோம்
வேகத்தை!

விதியின் பனிமலை
நம் வேகத்தால் கரைந்து
அலையாய் பின் தொடர்வதை
மறந்து, உணர்ந்தும் உணராது
சறுக்குகின்றோம்!

பனி மலையில் பயணம்
பனிப்பாறையை நோக்கி - எனிலும்
பாறையும் கரையும், மறையும்
நீராய் மாறும்!

நீரில் தொடங்கி, நீரில் முடியும்
நம் பயணத்தில்
நம் கையில் தொடக்கமும் இல்லை
முடிவும் இல்லை!

நடு நிலையில் - தடுமாறிய சறுக்கலில்
திடமான நடையை மறந்து
எதை நிலையாக்க
இந்த பயணம்??