Friday, December 28, 2012

கவிதைக்கு என் சமர்ப்பனம்!

 என் உயிர் தோழியே
வரண்ட நிலமாயினும், நீ உடன் இருக்கின்றாய்
சுனாமியின் தாக்கமாயினும், நீ உடன் இருக்கின்றாய்
கொட்டும் மழையிலும், நீ உடன் இருக்கின்றாய்
இவை அனைத்தும் என் மனதுக்குள் குடிபுகுமாயினும்,
நீ உடன் இருக்கின்றாய்

ஒருவருடன் ஒருவர் இருந்தால்
தனிமை தலைதெரிக்க ஓடுமாம்
இதை நன்கு அறிந்தவளோ நீ!
சுவாசத்திர்க்கு இனங்காய்
என்னுடன் இருக்கின்றாய்!!

அழகும் அம்சமும் உன் பிறப்புரிமையோ?
என்நிலையிலும் ஜொலிக்கின்றாய்
எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து
என் நிலை மாற்றுகின்றாய்!

கவிதையே!
என்ன தவம் செய்தேனடி
உன்னை வரமாய் பெற்றிட!

 

No comments:

Post a Comment