Tuesday, November 9, 2010

Happy Diwali

தித்திக்கும் இனிப்போடு,
கரகரப்பான பதார்த்தத்தோடு,
சுவையான உணவோடு,
இவைகளை ஜீரணிக்கும் லேகியத்தோடு,
ஏற்றத்தாழ்வுகளை ஜீரணிப்போம்!!
 
வெடிக்கின்ற வெடியோடு
தீய குணங்களை வெடித்து கரியாக்கிடுவோம்
மனதில் புதைந்துள்ள கசப்புகளை
மத்தாப்பில் பொறித்திடுவோம்
நமக்குள் மலர்கின்ற கனவுகளை
Rocketல் விண் செலுத்தி
அழகூட்டி மகிழ்ந்திடுவோம்!!
 
கழிந்தது கஷ்ட காலம்
மடிந்தது துயரங்கள் என
அதிகாலை நீராடி
புத்தாடை நாம் அணிந்து
புது வாழ்வை வரவேற்போம்!!
 
இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்!!

No comments:

Post a Comment