Wednesday, January 2, 2013

புத்தாண்டில் நான்!


சிறகடித்து பறக்கும் பிள்ளாய் என்பார்கள்
சிறகா? முலைப்பது எப்பொழுது, அறியேன் நான்
சிறு கூட்டுக்குள் குடிபுகுந்தேன்
என்னை நானே தாளிட்டேன்

எழுத்துக்களை சுவாசம் ஆக்கி
சிந்தனையை ஒளியாக்கி
தாளிட்ட இருளிள்
கவிதையுடன் ஜீவித்தேன்

திறமை தினறியது
அறிந்தும் அறியாமை என்னை ஆட்கொண்டது
குறள் இருந்தும் ஓசை எழும்பவிள்ளை
ஊமையாகிவிட்டேனோ?

பறந்த உலகம், ஜொலிக்கும் வெளிச்சம்
எனக்காய், என் திறமைக்காய்
நாள்பட காத்திருக்கையில்
இன்னும் தேடுகின்றேன் என் அறையின் சாவியை

புத்துனர்வு இப்புது வரவில்
புதிய வருடம் தாளை பிளந்தனெவோ
கண்கூச காணுகின்றேன்
இவ்வுளகை புதிய கண்கொண்டு