Monday, December 30, 2013

Happy New Year 2014


வாழ்க்கை சரிதம்

வாழ்க்கையை கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

புத்தாடை, பொலிவான முகம்
களிப்பும், கலகலப்பும் இணைந்த
பளிச்சிடும் புகைபடங்கள்
இனிமையை பறைசாற்றின

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

புத்தகத்தின் பக்கங்களை திருப்பினேன்
பொலிவு மெல்ல மெல்ல குறைந்தது
காகித்தின் தரம் குறைந்து விட்டதோ
அதிர்ச்சியில் நான்!

அடித்தல் திருத்தல் நிறைந்த வரிகள்
தேய்ந்து உரைந்த படங்கள்
இன்னும் உள்ளே சென்றால்
கிழிந்து போன காகிதங்கள்

இவை அணைத்தும் என் வாழ்விலா??

கிருக்கியது யார்?
கிழித்தது யார்?
அழித்தது யார்?
பின்னே உள்ள பக்கங்கள் பொலிவிழந்தது யாரால்?

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

காரணமாய்
பலர் முகங்களின் வரைபடங்கள்!
இத்தனை பேரா??
சினம் கொண்டேன்!!

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

இறுதி பக்கத்தில்
ஒரே வரி...
இவை அணைத்திற்கும் காரணம் நான்!
பக்கத்தில் என் கையொப்பம்

சிந்திப்போம்
அழகிய புத்தகத்தை உருவாக்குவோம்
பொலிவிழக்காது
பராமரிப்போம்!

New Year - Every Year - 2014

கவிதை எழுத பேனா எடுத்தேன்
ஓவியம் வறைய வண்ணங்கள் எடுத்தேன்
பட்டம் செய்ய காகிதம் எடுத்தேன்
மலர் வாசம் இழுக்க, மலர் மாலை தொடுத்தேன்

எடுத்தது ஒன்று,
முடித்தது ஒன்றென்று
காலம் கடந்தும்,
உணராத ஓட்டம் ஓடுகின்றோம் நாட்களுடன்

நாட்களும் ஓட , மாதங்களுடன்
மாதங்களும் ஓட, வருடங்களுடன்
நம் இலக்கும் ஓட, காலத்துடன்
நாமும் ஓடுகின்றோம், நம்பிக்கையுடன்

புதிதாய் ஓர் வாகனம்
ஓடுகின்ற இலக்கை பிடிக்க
இவ்வருடமாவது என
புத்தாண்டில் நாம்

புத்துணர்வோடும்,
புதிய சிந்தனையோடும்
உத்வேகத்துடனும்
பயனத்தை துவங்க...

இனிய ஆங்கில புத்தான்டு நல் வாழ்த்துக்கள்!!
 

Friday, November 22, 2013

இலக்கு

மனம் என்னும் காகிதத்தை
பட்டமாக்கி கற்பனையை
பறக்க செய்தேன்

மீட்டர் கனக்கில் நூல் இறுந்தும்,
காற்றை நோக்கி ஓடியும்
பறக்கவில்லை

உயர உயர ஏனி ஏரி
காற்றை செலுத்தி பட்டம் விட்டும்
பறக்கவில்லை

பட்டம் கீழே விழ
எட்டிப் பிடிக்கையில்,
பறந்தேன் நான், பட்டத்துடன் கீழே

அருகே முதியவர் ஒருவர், என்னை தாங்கி பிடித்து
பட்டத்தில் ஒட்டி இருந்த பாரத்தை அகற்றிட
விர்ரென காற்றில் பறந்து உயரத்தை அடைந்தது

உணர்ந்தேன் நான்,
நம் இலக்கை நாம் அடைய
நெடு நேர உழைப்போ
பாரமான சிந்தனையோ தேவையில்லை

லேசான மனதோடு
தெளிவான சிந்தனை கொண்டால்
வெற்றி இலக்கு நிச்சயம்!!

Monday, September 30, 2013

தொலைந்த பின் தேடல்!!

தேடுகின்றேன், உன் இரு விழிக்குள்
என் மனதில் ஒளிக்கும் இசைக்கேற்ப நடனத்தை
தேடுகின்றேன், உன் இதயத்துடிப்பில்
என் இதயத்துடிப்பின் ஸ்ருதிக்கேற்ப சரணத்தை
இத்தனை காலம் உன்னுள் என்னைத்தேடி
என்னை மறந்தேனடி!!

Wednesday, July 24, 2013

Intro Poem - Five to Fifty Search Never Ends


Teacher said – Smile, Smile, Smile, like a Sun

Kid asked – How about at night?

 

Teacher said - Be soft and tender like a flower smiling always

Student asked – How about a day or two after when it is dried

 

So are we

Who

Lost our glee

 

What is taught

Never

Stays in our thought

 

We show faces

To

All advices

 

We

 

Search for happiness

Till

Filled with drowsiness

 

Happiness

Cannot be taught

Should be

Felt from our heart

 

In all that we do

Happiness

Should be the glue
 
[Abstract from my book 'Five to Fifty Search Never Ends']

Wednesday, January 2, 2013

புத்தாண்டில் நான்!


சிறகடித்து பறக்கும் பிள்ளாய் என்பார்கள்
சிறகா? முலைப்பது எப்பொழுது, அறியேன் நான்
சிறு கூட்டுக்குள் குடிபுகுந்தேன்
என்னை நானே தாளிட்டேன்

எழுத்துக்களை சுவாசம் ஆக்கி
சிந்தனையை ஒளியாக்கி
தாளிட்ட இருளிள்
கவிதையுடன் ஜீவித்தேன்

திறமை தினறியது
அறிந்தும் அறியாமை என்னை ஆட்கொண்டது
குறள் இருந்தும் ஓசை எழும்பவிள்ளை
ஊமையாகிவிட்டேனோ?

பறந்த உலகம், ஜொலிக்கும் வெளிச்சம்
எனக்காய், என் திறமைக்காய்
நாள்பட காத்திருக்கையில்
இன்னும் தேடுகின்றேன் என் அறையின் சாவியை

புத்துனர்வு இப்புது வரவில்
புதிய வருடம் தாளை பிளந்தனெவோ
கண்கூச காணுகின்றேன்
இவ்வுளகை புதிய கண்கொண்டு