Tuesday, January 10, 2012

எழுத்து!

எண்ணங்களை
பிரதிபலிக்கும் கண்ணாடி
விண்ணுலகை
விழிக்கச் செய்யும் ஒளி
மண்ணுலகையே
மாற்றி வைக்கும் விதி

முறிந்த உறவை
இணைக்கும் பசை
விதைத்த ஆசையை
துளிர்விக்கும் ஓடை
ஆழ்ந்த துக்கத்தை
மறக்கடிக்கும் இசை

மனதில் சிதறி கிடக்கின்ற
எழுத்துக்களை சேகரிப்போம்
புதிய இலக்கனம் வகித்து
இலக்கியம் படைப்போம்
எழுத்தறிவு போதும்
படைப்பாளராய் மாற!!

விழிப்போம்!
படைப்போம்
எழுத்துக்களை கொண்டு
புதிய வரலாற்றை
உருவாக்குவோம்
வாரீர்!!