Monday, December 30, 2013

வாழ்க்கை சரிதம்

வாழ்க்கையை கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

புத்தாடை, பொலிவான முகம்
களிப்பும், கலகலப்பும் இணைந்த
பளிச்சிடும் புகைபடங்கள்
இனிமையை பறைசாற்றின

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

புத்தகத்தின் பக்கங்களை திருப்பினேன்
பொலிவு மெல்ல மெல்ல குறைந்தது
காகித்தின் தரம் குறைந்து விட்டதோ
அதிர்ச்சியில் நான்!

அடித்தல் திருத்தல் நிறைந்த வரிகள்
தேய்ந்து உரைந்த படங்கள்
இன்னும் உள்ளே சென்றால்
கிழிந்து போன காகிதங்கள்

இவை அணைத்தும் என் வாழ்விலா??

கிருக்கியது யார்?
கிழித்தது யார்?
அழித்தது யார்?
பின்னே உள்ள பக்கங்கள் பொலிவிழந்தது யாரால்?

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

காரணமாய்
பலர் முகங்களின் வரைபடங்கள்!
இத்தனை பேரா??
சினம் கொண்டேன்!!

இன்னும் கூர்ந்து பார்
என்றனர் சான்றோர்

இறுதி பக்கத்தில்
ஒரே வரி...
இவை அணைத்திற்கும் காரணம் நான்!
பக்கத்தில் என் கையொப்பம்

சிந்திப்போம்
அழகிய புத்தகத்தை உருவாக்குவோம்
பொலிவிழக்காது
பராமரிப்போம்!

No comments:

Post a Comment